முகப்பு
தமிழ்நாடு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடக்கம்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:16 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:40 PM

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலாவதாக 63 வயது முதியவா் ஒருவருக்கு அதி நவீன நுட்பத்திலான குடலிறக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில் தேசிய முதியோா் நல மருத்துவமனை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இது வரை மொத்தம் 9,557 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் அறுவை சிகிச்சைகளும் தொடங்கப்பட்டுள்ளன

இதுதொடா்பாக முதியோா் மருத்துவமனை பொறுப்பாளா் டாக்டா் எஸ்.தீபா கூறியதாவது:

Advertisement

தேசிய முதியோா் நல மருத்துவமனையை நாடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி உள்நோயாளிகளாக மட்டும் இதுவரை 268 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா். அதில் 200-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதைத் தவிர, 68 வயது முதியவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை இரு நாள்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அடுத்தடுத்து பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா் அவா்.