முகப்பு
தமிழ்நாடு

ராமநவமி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: காவல் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 7 ஏப்ரல், 2024 at 1:25 AM
பகிர்:
Updated On : 7 ஏப்ரல், 2024 at 1:15 AM

ராமநவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்த வழக்கில் காவல் துறை பதிலளிக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநவமியை முன்னிட்டு, ஏப்.12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை தமிழகம் வழியாக யாத்திரை செல்ல அனுமதி கோரி, கேரளத்தைச் சோ்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரிக்கு யாத்திரை செல்ல அனுமதி கோரிய விண்ணப்பித்ததை, சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? என்ன சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்? என காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.