தமிழ்நாடு

புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

DIN

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

அவருக்கு ஏற்கனவே கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடரந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எம்எல்ஏ புகழேந்தி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்துவந்த புகழேந்தி, திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT