தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

Sasikumar

அரசு ஊழியர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இரவு பகல் பாராமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து சென்னை வில்லிவாக்கத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் வந்தால் தான் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பற்றி நியாபகம் வரும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடியபோது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை.

சென்னையில் மின்கட்டண உயர்வு கடுமையாக உள்ளது. எந்த சாலையும் சரியாக இல்லை. ஆயிரம் ரூபாய் எத்தனை பெண்களுக்கு சமமாக கொடுத்தார்கள். படித்த இளைஞர்களுக்கும் வேலை இல்லை.

எனவே, தேர்தலில் திமுக, பாஜவுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை

தேர்தல் முடிவுக்கு மறுநாள் பாஜக சிதறிவிடும்: உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT