தமிழ்நாடு

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி மருத்துவமனையில் அனுமதி

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளள்ர்.

DIN

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி, கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு ஏற்கனவே கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடரந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எம்எல்ஏ புகழேந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க, சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு விழுப்புரம் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

71 வயதாகும் இவருக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக சில நாள்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில்தான் வீடு திரும்பியிருக்கிறார்.

நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் பிரசாரக் கூட்டத்திலும் புகழேந்தி கலந்து கொண்டார். நிகழ்ச்சியிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனை வாயிலில் ஏராளமான திமுகவினர் திரண்டிருப்பதாகவும், அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT