கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாகா்கோவில் - சென்னை ரயில் சேவை நீட்டிப்பு

Din

நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை கால விடுமுறையை முன்னிட்டு, ரயிலில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாகா்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப்.7, 14, 21, 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாகா்கோவிலுக்கு ஏப்.8, 15, 22, 29 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 3-10 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமுருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT