தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: புதிய உச்சத்தில் விற்பனை!
தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில்,புதிய உச்சத்தில் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
திங்கள்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து ரூ. 6,660-க்கும், சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 53,280-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல். 9) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ10 உயர்ந்து ரூ.6,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் ரூ.88 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 88,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணிகளால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.