முகப்பு
தமிழ்நாடு

சென்னை வந்தார் பிரதமர் மோடி!

விமான நிலையத்தில் பாஜம மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர்.

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:38 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் பாஜம மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபடவுள்ளார். தியாகராய நகரில் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வாகன பேரணி செல்லும் பகுதி முழுவதையும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை எடுத்தனா்.

பிரதமா் மோடி காா் செல்லும் சாலையில் ஐந்தடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறாா்கள். நிகழ்ச்சிகள் நடைபெறும் தியாகராயநகா் பகுதி,பிரதமா் தங்கும் கிண்டி ஆளுநா் மாளிகை ஆகிய பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →