தமிழ்நாடு

என் வாழ்நாளில் மறக்க முடியாதவர் ஆர்.எம். வீரப்பன்: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கரமாக செயல்பட்டவர் ஆர்.எம். வீரப்பன்.

DIN

மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து மண்ணைவிட்டுப் பிரிந்துள்ளார் சகோதரர் ஆர்.எம். வீரப்பன்.

எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கரமாக செயல்பட்டவர் ஆர்.எம். வீரப்பன்.

அவரால் உருவாக்கப்பட்ட சிஷியர்கள் மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வந்துகொண்டுள்ளனர்.

ஆர்.எம். வீரப்பன் எப்போதும் பணத்துக்கு பின்னாடி சென்றவரல்ல. அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர்.

அவருடனான என் நட்பு ஆழமானது. என் வாழ்நாளில் அவரை நான் மறக்கவே முடியாது. அவர் நம்முடன் தற்போது இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது எனக் கூறினார்.

ஆர்.எம். வீரப்பன் மறைவு

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆர்.எம். வீரப்பன்.

சென்னையில் வசித்து வந்த ஆர்.எம். வீரப்பன், மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், மருத்துவர்களின் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

6 மாதங்களுக்குப் பிறகு... ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்!

SCROLL FOR NEXT