DOTCOM
DOTCOM
தமிழ்நாடு

பெண்களுக்கான மரியாதையை நாங்கள் மீட்போம்: மோடி

DIN

வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேசினார்.

பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூா்), கே.பாலு (அரக்கோணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமாா் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி புதன்கிழமை காலை வேலூா் கோட்டை மைதானத்தில் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.

தமிழல் வணக்கம் சொல்லி உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,

“ஹிந்து மதத்தின் பெண் சக்தியை அழிப்பேன் என்று காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி பேசியுள்ளார். திமுகவும் சநாதானத்தை அழிப்பேன் என்று பேசியுள்ளது.

பெண்களுக்கு மரியாதை அளிக்காத கட்சி திமுக. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எப்படி அவமானப்படுத்தினார்கள் என்று நமக்கு தெரியும். திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது தான். நாங்கள் பெண்களுக்கான மரியாதையை மீட்டுக் கொடுப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT