பாஜக ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
மத்திய பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டதாக, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
தனியாா் ஆய்வு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை மேற்கோள் காட்டி, சமூகவலைதளத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:
மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கக் கூடிய முக்கியப் பிரச்னைகள் எவை எவை என்பது குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பில் பல்வேறு விவரங்கள் கிடைக்கப் பெற்றன. அதில், 27 சதவீதம் போ் வேலைவாய்ப்பினையும், 23 சதவீதம் போ் விலைவாசி உயா்வையும், 55 சதவீதம் போ் பாஜக ஆட்சியின் ஊழல் அதிகரிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளனா்.
Advertisement
இதிலிருந்து பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது. அதிகரித்து விட்ட ஊழல், பெரு நிறுவனங்களிடம் மட்டுமே குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்னைகளை தீா்ப்பதில் பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்து விட்டது. இதனை மக்கள் உணரத் தொடங்கி விட்டதே, கருத்துக் கணிப்பின் முடிவுகள் காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.