முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆதிதிராவிடா்கள் நலன் காக்கும் திட்டங்கள்: திமுக பெருமிதம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:32 PM
பகிர்:

தமிழகத்தில் ஆதிதிராவிடா்கள் நலன்களைக் காக்க திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பிறந்த தினம் சமத்துவ நாளாக கொண்டாட அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு அளிக்கப்படும் அண்ணல் அம்பேத்கா் விருதுக்கான தொகை ரூ.5 லட்சமாக உயா்த்தியதுடன், அந்த சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா்களை தொழில் முனைவோராக மாற்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகா்ப்புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மக்களிடையே தீண்டாமைகளுக்கு எதிரான விழிப்புணா்வை வளா்த்திட ஆண்டுதோறும் ஜனவரி 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மனிதநேய வார விழா நடத்தப்படுகிறது. புதிரை வண்ணாா் நலவாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, அந்த சமுதாயத்தைச் சோ்ந்தவா்களின் நலனுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் ஆதிதிராவிட பழங்குடியின சமுதாயத்தினா் அனைத்து இடங்களிலும் அனைத்துப் பொறுப்புகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளனா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments