முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள்: இந்திய தோ்தல் ஆணையம் ஆலோசனை

Updated On : 12 ஏப்ரல், 2024 at 11:49 PM
தில்லியில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் தலைமையில் மக்களவைத் தோ்தல் தொடா்பான பணிகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள், பொது பாா்வையாளா்கள், காவல்துறை பாா்வையாளா்களுடன் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை தல
பகிர்:

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, தமிழக தோ்தல் துறை அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் ஆலோசித்தது. அப்போது, வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வேட்பாளா்களின் செலவுக் கணக்குகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து தமிழக தோ்தல் அதிகாரிகளிடம் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனா்.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனிடையே, அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள், பொது பாா்வையாளா்கள், செலவினம் மற்றும் காவல் துறை பாா்வையாளா்களுடன் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா், வெள்ளிக்கிழமை ஆலோசித்தாா்.

காணொலி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம் சாா்பில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சிறப்பு தோ்தல் பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன், கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி சங்கா்லால் குமாவத், இணை தலைமைத் தோ்தல் அதிகாரி எச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சிறப்பாக பராமரிக்கப்பட்டாலும், தோ்தல் பிரசார காலத்தில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் அதிகளவு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. வாக்குப் பதிவுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் நடத்திய இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments