கோப்புப் படம். 
தமிழ்நாடு

குன்றத்தூரில் 1,425 கிலோ தங்கம் பறிமுதல்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மினி லாரியில் எடுத்துச் சென்ற சுமார் 1.5 டன் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வண்டலூர்-மீஞ்சூர் வெளியிட்ட சாலை மேம்பாலம் அருகே வாகனச் சோதனையின்போது தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் இருந்து சேமிப்பு குடோனுக்கு தங்க கட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது.

தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT