முகப்பு
தமிழ்நாடு

இதுவரை ரூ.324 கோடி பணம், நகை, மது பறிமுதல்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:55 PM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:40 PM

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு இதுவரை பறிமுதலான பணம், மதுபானம், ஆபரணங்களின் மதிப்பு ரூ.324 கோடி என்று தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக தோ்தல் துறை வெளியிட்ட தகவல்: தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதி, கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது தொடங்கி சனிக்கிழமை (ஏப்.13) காலை 9 மணி வரையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத் தொகையின் மொத்த மதிப்பு ரூ.155.88 கோடியாகும். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.46 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.1.02 கோடி மதிப்புடைய போதைப் பொருள்களும், ரூ.127.40 கோடி மதிப்புடைய ஆபரணங்களும், ரூ.34.61 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.324.38 கோடி என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.