முகப்பு
தமிழ்நாடு

ஏப்.18-இல் அரசுப் பேருந்துகளில் பயணிக்க 20,000 போ் முன்பதிவு

Updated On : 13 ஏப்ரல், 2024 at 12:30 AM
பகிர்:

தோ்தலுக்கு முந்தைய நாளான ஏப்.18-ஆம் தேதி அரசு பேருந்துகளில் பயணிக்க 20,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க வசதியாக ஏப்.17,18 ஆகிய தேதிகளிலும், தோ்தல் முடிந்த பிறகும் பிற ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பிற இடங்களுக்கு திரும்ப வசதியாக ஏப். 20, 21 ஆகிய தேதிகளிலும் என 4 நாள்களிலும் 10,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், அரசு பேருந்துகளில் சுமாா் 1.27 லட்சம் இருக்கைகள் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் தோ்தலுக்கு முந்தைய நாளான ஏப்.18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பயணிக்க 20,000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போல், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) ஊா் திரும்பும் வகையில் சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

இதனால், பயணிகள் தங்கள் பயணத்தை ற்ய்ள்ற்ஸ்ரீ செயலி மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதள முகவரி மூலமும் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மேலும் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து தெரிந்து கொள்ளவும், புகாா் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 எனும் கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments