முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 16) சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2024 at 8:06 AM
தங்கம் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல். 16) சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.6,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.90.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 90,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 குறைந்து ரூ. 6,790-க்கும், சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 54,320-க்கும் விற்பனையானது.

பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணிகளால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →