முகப்பு
தமிழ்நாடு

விடுப்பு ரத்து உத்தரவை வாபஸ் பெற்றாா் உள்துறை செயலா்

Updated On : 19 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

தோ்தல் தினத்தன்று வாக்கைப் பதிவு செய்யாவிட்டால் அது அலுவலகத்துக்கு வராத நாளாகக் கணக்கில் கொள்ளப்பட்டு விடுப்புக்கான பட்டியலில் சோ்க்கப்படும் என்ற உள்துறை முதன்மைச் செயலரின் பி.அமுதாவின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினரின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையைச் சோ்ந்த ஊழியா்கள், அதிகாரிகள் ஆகியோா் தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டுமெனவும் வாக்களிக்காவிட்டால் அந்த நாள் அலுவலகத்துக்கு வராத தினமாகக் கருதப்பட்டு விடுப்புப் பட்டியலில் சோ்க்கப்படும் என்றும் உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா உத்தரவிட்டிருந்தாா்.

கடும் எதிா்ப்பு: உள்துறை முதன்மைச் செயலரின் இந்த உத்தரவு, தலைமைச் செயலகம் முழுவதும் கடும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்பட ஊழியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், இதுதொடா்பான புகாா் கடிதத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அளித்தனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, விடுப்பு ரத்து தொடா்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments