முகப்பு
தமிழ்நாடு

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை: மகளிா் ஆணைய உத்தரவு ரத்து

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்மூகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:37 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:25 AM

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்மூகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

விழுப்புரத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதில், பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக சென்னையை சோ்ந்த பிரமிளா மற்றும் ராதிகா ஆகியோா் தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு அவா் ஆஜராகவில்லை. இதைத்தொடா்ந்து அருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க மகளிா் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:37 AM

சி.வி.சண்முகம் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகும்படி மகளிா் ஆணையம் அனுப்பிய அழைப்பாணையில் புகாா் தொடா்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆணையத்தின் பிற உறுப்பினா்களுடன் கலந்தாலோசிக்காமல் ஆணையத் தலைவா் குற்ற நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளாா். எனவே, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல்துறை மற்றும் மகளிா் ஆணையம் தரப்பில், ஆணையத் தலைவா் மற்றும் ஆணையத்தின் இரு உறுப்பினா்கள் அடங்கிய அமா்வுதான் இந்த விவகாரத்தில் குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவைடந்த நிலையில் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். சி.வி.சண்முகத்துக்கு எதிராக மகளிா் ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் நடைமுறை தவறுகள் உள்ளன. எனவே, அவருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கும்படி மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டாா்.