தமிழ்நாடு

மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன்: சத்யபிரத சாகு

DIN

சென்னை: வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்குள் வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கி வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் மாதவரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட நெற்குன்றம் எம். ஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தனது வாக்கை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் காலை முதல்கட்ட வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது. மூன்று நான்கு இடங்களில் ஈவிஎம் இயந்திரம் வேலை செய்யாததால் உடனே பொறியாளர்கள் வர வைக்கப்பட்டு இயந்திரம் சரி செய்யப்பட்டு 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இவிஎம் இயந்திரம் பழுதாகும்போது உடனே மாற்றுவதற்கு, கூடுதல் இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் 1500 வாக்காளர்களின் பெயர் மற்றும் இடம் பெறும். அதனால் வாக்காளர் பெயர் இல்லாதவர்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் அவர்கள் பெயர் இருக்க வாய்ப்புள்ளது.

வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் உதவி செயலியின் இணையதளத்தில் சோதனை செய்து கொள்ளலாம்.

இந்த முறை முதல் முறையாக வாக்களிப்பவர்கள், இளைஞர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கையும் வாக்கு சதவீதமும் அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம்.

மாலை 6 மணிக்குள் வாக்களிக்க வரும் அனைவருக்கும் வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும். இரவு 8 மணி ஆனாலும் டோக்கன் பெற்ற இறுதி நபர் வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT