தமிழ்நாடு

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

சென்னை வேளச்சேரியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாக்களித்தார்.

DIN

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுவாக சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்து வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி வடசென்னையில் 16.37%, தென்சென்னை 17.71%, மத்தியசென்னை 15.80% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், பிஹார் மாநிலத்தில் இருந்த தனது வாக்கை தமிழகத்தின் தென்சென்னை தொகுதிக்கு மாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார்.

இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளப் பதிவில், “ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவில் பங்கேற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்ததாக உணர்கிறேன். நாம் அனைவரும் இத்திருவிழாவை முழு உற்சாகத்துடன் கொண்டாடுவோம்.” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன என்ன வார்த்தைகளோ... ஸ்ரேயா சரண்!

200 டிகிரி கோணத்தில் படம் பார்க்கலாம்! ஸெப்ரானிக்ஸின் புதிய புரொஜெக்டர்!

நினைவோ ஒரு பறவை... பிரியா மணி!

நவம்பர் வானம்... சம்யுக்தா!

தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய 125 இந்தியர்கள்! எண்ணிக்கை 1,500 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT