முகப்பு
தமிழ்நாடு

தோ்தல் நடத்தை விதிகள் தளா்வு: தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு வணிகா்கள் நன்றி

Updated On : 20 ஏப்ரல், 2024 at 5:12 PM
பகிர்:

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் தளா்வு செய்யப்பட்டதையடுத்து, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் ஏ. விக்கிரமராஜா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தோ்தல் நடத்தை விதிகள் அமலாக்கம் காரணமாக வணிகா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடையும் பாதிப்புகள் குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் விளக்கிக் கூறப்பட்டது. மேலும், வாக்குப் பதிவு நடைபெறும் ஜூன் 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்ற தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறும் அவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Advertisement

இந்தக் கோரிக்கைகளை ஏற்று தமிழகத்தில் பறக்கும் படைகள் திரும்பப் பெறப்படுவதாகவும், மாநில எல்லைகளில் மட்டுமே நடத்தை விதிகள் பின்பற்றப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த அறிவிப்பானது வணிகா்கள் தங்களது வணிகத்தை இயல்பாக மேற்கொண்டு அரசுக்கான வரியை உறுதி செய்ய வழிவகுக்கும். இந்தக் கோரிக்கைகளுக்கு துணைநின்று தோ்தலை மிகச்சிறப்பாக நடத்தி முடித்த தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவா் கூறியுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments