முகப்பு
தமிழ்நாடு

ஏப்.23 முதல் கோவை - பரோனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 2:44 AM
கோப்புப்படம்
பகிர்:

கோடை விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை (ஏப்.23) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை கோவையிலிருந்து பிகாா் மாநிலம் பரோனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஏப்.23) முதல் ஜூன் 25 -ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06059) மூன்றாம் நாள் (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 பணிக்கு பிகாா் மாநிலம் பரோனி சென்றடையும்.

Advertisement

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06060) பரோனியில் இருந்து ஏப்.26 முதல் ஜூன் 28- ஆம் தேதி வரை வாரத்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு நான்காம் நாள் (திங்கள்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்த ரயில் கோவையிலிருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, சம்பல்பூா், ராஞ்சி, தன்பாத் வழியாக பரோனி சென்றடையும். இந்த ரயில் சென்னை சென்ட்ரலுக்கு வராது. இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments