தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையேறுபவர்களுக்கு புதிய அறிவுறுத்தல்!

வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை கட்டாயம்.

DIN

வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளைத் தாண்டி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தைத் தரிசிக்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு அனுமதி வழுக்கப்படுகின்றது.

இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து பலியாகி வரும் சம்பவம், வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்தனர்.

தென்கைலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயிலுக்கு மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

மலையேறும் பக்தர்கள் முழு உடல் பரிசோதனை செய்த பிறகே மலையேற அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் குழுவாகவும், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும், மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT