கோப்புப்படம்
கோப்புப்படம்
தமிழ்நாடு

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

DIN

பெங்களூரில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடித்தது. அதில் பலா் படுகாயமடைந்தனா். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முசாவீா் ஹுசைன் சாஹிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடர்பாக, சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகளில் இன்று(ஏப். 27) என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விசாரணை தொடர்பான முழு விவரம், பின்னர் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

SCROLL FOR NEXT