தமிழ்நாடு

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விடக் குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும்.

அதிமுக அட்சியிலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும் நிதி குறைத்து தான் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன. மேலும் போதைப்பொருள் விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கையில் கால்பந்து போட்டி

விஜய் செய்தது தவறான முன்னுதாரணம்: நயினாா் நாகேந்திரன்

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

காலமானாா் ஞானத்தாய்

300 அடி பள்ளத்தில் லாரி, வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT