சிசிடிவி காட்சி 
தமிழ்நாடு

வேலூர்: குழந்தையை கட்டைப்பையில் வைத்துக் கடத்திய பெண்!

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை கட்டைப்பையில் வைத்துக் கடத்திய பெண்!

DIN

வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாள்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், சந்தேகம் வராத வகையில், குழந்தையை ஒரு பெண் கட்டைப்பையில் வைத்துக் கடத்திச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆண் குழந்தை திருடப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பார்ப்பது போல் வந்து பையில் வைத்து குழந்தையை கடத்தி சென்ற பெண் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை கடத்தி கட்டைப்பையில் வைத்து எடுத்துச் செல்லும் பெண் உடன் ஒரு சிறுவனையும் அழைத்து வந்துள்ளார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூா் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் (25). தொழிலாளி. இவரது மனைவி சின்னி. சின்னி பிரசவத்துக்காக கடந்த 27-ஆம் தேதி இரவு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதே நாள் இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் பிரசவ வாா்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்தாா்.

அதன் பின் குழந்தை நல வார்டுக்கு சின்னி உடன் குழந்தையையும் மாற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் சின்னிவின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக் கொள்வதாகக் கூறி சின்னியிடம் குழந்தையை வாங்கி கடத்திச் சென்றுள்ளார் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சின்னி அளித்த தகவலின்படி, குழந்தையை கடத்திச் சென்ற பெண் ஒரு கட்டைப்பையை கையில் வைத்துக்கொண்டு வெளியே செல்வது தெரிய வந்துள்ளது. எனவே, அவர் குழந்தையைக் கடத்தி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கட்டைப்பையில் வைத்து கடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT