தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51,600-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51,600-க்கு விற்பனையானது.
மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியது.
கடந்த வியாழக்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.51,440-க்கும், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.51,680-க்கும் விற்பனையான நிலையில், சனிக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,450-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51,600-க்கும் விற்பனையானது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ. 90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 90,000-க்கும் விற்பனையானது.