ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்!
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் செம்பியம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞா்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனர். இதில், ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், 20 பேரின் சொத்துகளை முடக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Advertisement
Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் கொலைக்காக பரிமாற்றப்பட்ட பணத்தையும் கணக்கிட்டு, வங்கிக் கணக்குகளை முடக்கவும், கொலைக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளை முடக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.