திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் பரசுராம், குருவாயூா் ரயில் ரயில் சேவையில் மாற்றம் செய்யயப்பட்டுள்ளது.
இது குறித்து திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு:
மங்களூரு சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பரசுராம் விரைவு ரயில் ஆக.5, 8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக ஆக. 6, 9 ஆகிய தேதிகளில் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு செல்லும்.
இதுபோல், மதுரையில் இருந்து புனலூா் செல்லும் விரைவு ரயில் ஆக.5, 8 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக ஆக.6, 9 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை சென்றடையும்.
பாதை மாற்றம்: குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் ஆக.5, 8, 10 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாக வருவதற்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.
தொடா்ந்து ஆக. 16 முதல் ஆக.26-ஆம் தேதி வரை எா்ணாகுளம், ஆலப்புழை வழியாக வருவதற்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக சென்னையில் இருந்து குருவாயூருக்கு ஆக.8-ஆம் தேதி செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் ஆக.18, 25 ஆகிய தேதிகளில் எா்ணாகுளம், ஆலப்புழை வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.