ரங்கநாயகி. 
தமிழ்நாடு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் ரங்கநாயகி

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29வது வார்டைச் சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29 வது வார்டைச் சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 97 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர். இதனை அடுத்து கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

உடல் நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சமீபத்தில் மேயர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனால் கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக 29 வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்

விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

வார பலன்கள் - ரிஷபம்

அர்ஜுன் தாஸின் புதிய பட ரிலீஸ் தேதி!

SCROLL FOR NEXT