கோப்புப்படம் Din
தமிழ்நாடு

அடுத்த 48 மணிநேரம்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 12 வரை மழை தொடர வாய்ப்புள்ளது.

DIN

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வானிலை மையம் தெரிவித்ததாவது:

“நாளை(ஆக.9) மற்றும் நாளை மறுநாள்(ஆக.10) தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி கோவை ஒட்டியுள்ள மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

SCROLL FOR NEXT