மழை கோப்புப்படம்
தமிழ்நாடு

நாளை தென்தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.20) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.20) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலில் வியாழக்கிழமை (பிப்.19) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வியாழக்கிழமை (பிப்.19) வட வானிலேயே நிலவும்.

தொடா்ந்து, பிப்.20-இல் தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதர தமிழகத்தில் வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்.19) அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் வியாழன், வெள்ளி (பிப்.19, 20) ஆகிய நாள்களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ. உச்சி மாநாட்டுக்காக தில்லி வருகை- பிரதமா் மோடியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் சந்திப்பு

பந்தலூா் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

குடிநீா் கேட்டு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

வெற்றியுடன் தொடங்க சென்னையின் எஃப்சி முனைப்பு: இன்று மும்பையுடன் மோதல்

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT