கோப்புப்படம் Din
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்!

ரூ. 2 லட்சம் மதிப்பிலான மீன்பிடிப் பொருள்களை கொள்ளையடித்த இலங்கை மீனவர்கள்.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்துக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்களை  இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கியுள்ளனர்.

வேதாரண்யம் காவல் சரகம், ஆறுகாட்டுத்துறை வடக்கு தெருவைச் சேர்ந்த விமலா (55) என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அதே பகுதியை சார்ந்த  ஐந்து மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர்.

ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே சுமார் 20 நாட்டிகல் மைல் தொலைவில் மாலை 6 மணியளவில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ஒரு படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த 5 தமிழ் மீனவர்களில் 3 நபர்கள் இவர்களது படகில் ஏறி, இவர்கள் விரித்து வைத்திருந்த வலையை எடுக்கக் கூறி அன்பழகன் என்பவரை மூங்கில் தடியால் முன் தலையில் தாக்கியும் வாள், தூண்டில் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி, வலை உள்பட மீனவர்களின் உடமையை  பறித்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும்  வியாழக்கிழமை காலையில்  கரை சேர்ந்தனர்.

தலையில் காயம் ஏற்பட்ட அன்பழகன் என்பவர் வேதாரண்யம், அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

SCROLL FOR NEXT