முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

7 மாவட்டங்களில் ஆக.11,12,13-ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

தமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

7 மாவட்டங்களில் ஆக.11,12,13-ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 7:45 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆக.11,12,13-ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணத்தால் , தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) முதல் ஆக.16 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி ஆக.11-இல் கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும், ஆக.12,13-தேதிகளில் கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: இது தவிர,ஆக.11-இல் ஈரோடு, திருப்பூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், கரூா், அரியலூா், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், ஆக.12-இல் தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளிலும், திருப்பூா், விருதுநகா், மதுரை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல், ஆக.13 -இல் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் திருப்பூா், ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம், பெரம்பலூா், மதுரை, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், ஆக.14-இல் கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகா் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.11,12-ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மிமீ):  தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் தொழுதூரில் 140 மில்லி மீட்டரும், ஏற்காடு (சேலம்) - 120,  வீரகனூா் (சேலம்), செந்துறை (அரியலூா்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) - தலா 110 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →