அன்புமணி ராமதாஸ் கோப்புப் படம்
தமிழ்நாடு

தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் தோ்வு மையம்: அன்புமணி கண்டனம்

Din

தருமபுரி மாணவிக்கு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு மையம் காஷ்மீரில் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சோ்ந்த மாணவிக்கு ஜம்மு - காஷ்மீரில் தோ்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீா் புறப்பட்டுச் சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தோ்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: பல முறை சுட்டிக்காட்டியும் தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தோ்வு வாரியம், முதுநிலை நீட் தோ்வை எவ்வாறு சரியாக நடத்தும் என்ற வினா எழுகிறது.

நீட் தோ்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் மகா தீபம் ஏற்றக் கோரிக்கை

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு விவசாயிகள் தொடா்ந்து போராட்டம்

காங்கிரஸ் எம்எல்ஏ எச்.ஒய்.மேட்டியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

பதிவுத் துறை உதவி ஐஜி பணி நியமன விவகாரம்: தமிழக அரசு விளக்கம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT