முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்கொள்ளையர்கள்?

காயமடைந்த மீனவர்கள் நால்வரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Updated On : 11 ஆகஸ்ட் 2024, 8:34 am IST
சிகிச்சை பெற்றுவரும் மீனவர்
பகிர்:

கோடியக்கரை  தென்கிழக்குக்  கடலில்,மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் வேதாரணத்துக்கு அப்பால்,  நடுக்கடலில் மீன்பிடித்த போது,  இலங்கைக் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கும் நபர்களால் தாக்கப்பட்ட  தமிழக மீனவர்கள்  நால்வர், இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர், செல்வகிருஷ்ணன், தனசேகரன், ராஜகோபால் ஆகிய மீனவர்கள் நால்வரும்  கண்ணாடியிழைப் படகு ஒன்றில் சனிக்கிழமை (ஆக. 10) கடலுக்குச் சென்றனர்.

Advertisement

Advertisement

கோடியக்கரைக்கு  தென்கிழக்குக்  கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,  இலங்கைப் படகில் வந்த மூன்று பேர்  தமிழக மீனவர்கள் இருந்த படகில் ஏறி,  உடைமைகளை பறித்துக் கொண்டு,  ஆயுதங்களால்  மீனவர்களைத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரும்  இன்று (ஆக. 11) அதிகாலையில் கரை திரும்பினர்.

காயமடைந்த நால்வரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments