சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையம். (கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

சென்னையில் பருவ மழை: அமைச்சர்கள் ஆலோசனை!

சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையடுத்து மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு. தா.மோ.அன்பரசன், உதயநிதி, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு என 7 துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சென்னை எம்.பி.க்கள், கவுன்சிலர்கள், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம், நகராட்சி நிருவாகம் என மழைக்கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் துறை அதிகாரிகளும் உள்ளனர்.

மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், ஆகாயத் தாமரையை அகற்றுவது உள்ளிட்டவை குறித்தும் கடந்த ஆண்டைவிட கூடுதலாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT