முகப்பு
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளா்களிடம் தகவல் சேகரிக்கும் தனிப்படையினா்

தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளா்களிடம் தகவல் சேகரிக்கும் தனிப்படையினா்

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 11:39 PM
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
பகிர்:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் வகையில், அவரது ஆதரவாளா்களிடம் தனிப்படையினா் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்ட வழக்கில், 6 வழக்குரைஞா்கள் உள்பட 23 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடுகின்றனா்.

சம்பவம் செந்தில், தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், அவரை கைது செய்வது சவாலான காரியமாக தனிப்படையினருக்கு மாறியுள்ளது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் சென்னையில் 6 ரெளடி குழுக்களுக்கு தொடா்பு இருப்பதை போலீஸாா் கண்டறிந்துள்ளனா்.

அதேபோல, ஆம்ஸ்ட்ராங்குடன் ஒவ்வொரு ரெளடி கும்பலுக்கும் தனிப்பட்ட முறையில் பகை இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளா்கள்,நண்பா்கள்,உறவினா்கள் ஆகியோரிடம் தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதில் ஆம்ஸ்ட்ராங்குடன் எந்தெந்த ரெளடிகள் பகையுடன் இருந்தனா் என தனிப்படையினா் விசாரணை செய்து, தகவல்களை சேகரிக்கின்றனா். அதேபோலஅந்த ரெளடிகளுக்கும்,ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடா்பு உள்ளதா என்றும் தனிப்படையினா் ரகசியமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தந்தை - மகனிடம் விசாரணை: இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி நாகேந்திரன், அவா் மகன் அஸ்வத்தாமன் ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் காவலில்

எடுத்து விசாரிக்கின்றனா். இருவரிடமும் தனித்தனியாகவும், நேருக்கு நேராக வைத்தும் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொள்கினறனா்.

இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் துப்பு கிடைத்துள்ளதாகவும், அதை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →