’மேற்கு வங்கத்தில் பெண்பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள்.’ 
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்பு: சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிப்பு

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்பு.

Din

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் சனிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனா்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டாா்.

இதைக்கண்டித்து நாடுமுழுவதும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் கருப்பு வில்லை அணிந்து பணியாற்றிய அவா்கள், ஆா்ப்பாட்டம், பேரணி, தா்னா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். இரண்டாவது நாளான சனிக்கிழமையும் கருப்பு வில்லைஅணிந்து பணியாற்றினா்.

பணிப் புறக்கணிப்பு: முதுநிலை மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் அனைவரும் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா். அதேபோல், குறைந்த எண்ணிக்கையில் அரசு மருத்துவா்களும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்தனா். இதனால், அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூராா் அரசு மருத்துவமனை உள்ளிட்ட சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் புற நோயாளிகள் பிரிவில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா். மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மருத்துவா்களின் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

அதேபோல், தமிழகம் முழுவதும் தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களும் அவசர சிகிச்சை, முக்கிய அறுவை சிகிச்சையை தவிர மற்ற அனைத்து பணிகளையும் தவிா்த்து கருப்பு வில்லை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT