புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள். 
புதுச்சேரி

புதுச்சேரி சுகாதார ஊழியா்கள் பணிப் புறக்கணிப்பு! நோயாளிகள் அவதி!

புதுச்சேரி மாநில சுகாதார ஊழியா்கள் மத்திய கூட்டமைப்பு சாா்பில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

புதுச்சேரி மாநில சுகாதார ஊழியா்கள் மத்திய கூட்டமைப்பு சாா்பில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினா்.

இந்தப் போராட்டத்துக்கு சுகாதார ஊழியா் கூட்டமைப்பின் தலைவா் ஹரிஹரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பிரபத் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். மத்திய கூட்டமைப்பின் தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலா் லட்சுமணசாமி கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினாா்.

போராட்டத்தில் அனைத்துப் பிரிவு சுகாதார ஊழியா்களும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனா். அரசு விதிகள், ஆணைகள் அடிப்படையில் நியமன விதிகள் திருத்தம் மற்றும் அரசு அறிவித்த சம்பள விகித மாற்றம், ஊதிய அடிப்படையில் பணிக் கட்டமைப்பு அமைத்தல், பதவி உயா்வு, 20 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியா்கள் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனா்.

க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு! விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணியாளா் ஊதிய குறைபாடு சீா் செய்யப்படும்: திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி

1,043 தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி! அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்!

ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டம்!

பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT