இன்றும், நாளையும் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழ்நாடுஇன்றும், நாளையும் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் (ஆக.18, 19) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக கடலோர பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) முதல் ஆக.23-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: ஆக.18-இல் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், ஆக.19-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆக.18-இல் கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலும், ஆக.19-இல் திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஆக.18, 19 ஆகிய தேதிகளில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக.18-21 வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகளிலும், குமரிக்கடல், வங்கக்கடல், அரபிக்கடல், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளிலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.