அண்ணாமலை கோப்புப் படம்
தமிழ்நாடு

திமுக - பாஜக இடையே ரகசிய உறவா? இபிஎஸ்ஸுக்கு அண்ணாமலை பதிலடி!

நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக விமர்சித்தார் அண்ணாமலை.

DIN

நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஆக. 19) விமர்சித்தார்.

ரகசிய உறவு என்று கூறுவதற்கு என்ன காரணம்? என்றும், பாஜக தொடக்கூடாத கட்சியா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பலர் கலந்துகொண்டனர்.

இதனிடையே திமுக - பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆக. 18) விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய அண்ணாமலை, கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா தொடர்பாக அதிமுக அரசியல் பேசுவது வேதனை அளிக்கிறது.

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடத்தியதைப்போல, ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்த அதிமுக விரும்பினால் அனுமதி தரப்படும்.

நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை விட 5 மடங்கு வழக்கு என் மீது உள்ளது என அண்ணாமலை குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

SCROLL FOR NEXT