முகப்பு
தமிழ்நாடு

புதிதாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு: தமிழக முதல்வர்

சென்னையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு இன்று நடைபெற்றது

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 7:52 AM
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில், பல்வேறு தொழிற்துறை திட்டங்களை,முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில், ரூ. 51,157 கோடி முதலீட்டில் 28 தொழில்துறை திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 17,616 கோடி முதலீட்டில் 19 கூடுதல் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

மாநாட்டின்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, `` தமிழ்நாட்டின் தொழில் துறை வரலாற்றில் இது முக்கியமான நாள். தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்தும் நாளாக இது அமைந்துள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றும் 19 வகையான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் 64,968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது. 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இதன் மூலமும் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வளர்ச்சியின் அடையாளமாக, தொழில் நிறுவனங்கள் உள்ளது. அமைதியான சட்டம் ஒழுங்கு உள்ள மாநிலத்தைத் தேடிதான், தொழில் நிறுவனங்கள் வருவார்கள். அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும். தொழிலதிபர்களுக்கும் நன்றி.

உங்களை போன்ற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள். அதிக முதலீடுகளை ஈர்க்கக்கூடிய தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தொழில்களை ஈர்த்து, அதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என தமிழகத்தின் இலக்கை அடைய அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

நிலைக்கத்தக்க வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, பல்வேறு சிறப்பம்சங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என உலகம் முழுக்க தெரியும். மிகுந்த திறமையும் படைப்பாற்றலும் கொண்டவர்கள் தமிழ்நாட்டின் இளைஞர்கள். அவ்வாறான இளைஞர்களின் திறன்களை, முதலீட்டாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →