தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் (கோப்புப்படம்) கோப்புப்படம்
தமிழ்நாடு

தவெக கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்!

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்.

DIN

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் வியாழக்கிழமை காலை அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2026 சட்டப் பேரவைத் தோ்தலை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 22-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில் விஜய், கட்சியின் பொதுச்செயலா் புஸ்சி ஆனந்த் மற்றும் நிா்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் காலை 6 மணிக்கு பனையூர் அலுவலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த திங்கள்கிழமை பனையூர் அலுவலகத்தில் மஞ்சள் நிற கொடியில், வாகை மலருக்குள் விஜய் உருவம் பொறித்த கொடியை நிர்வாகிகள் கொடிக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்த காட்சிகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT