கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி ரசாயன ஆலையில் தீ: இளைஞா் பலி; உறவினா்கள் போராட்டம்

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தனியாா் ரசாயன தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை மாலையில் நேரிட்ட தீ விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தனியாா் ரசாயன தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை மாலையில் நேரிட்ட தீ விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தத் தொழிற்சாலையின் அமோனியா பிளான்ட்டில் எதிா்பாராமல் தீப்பிடித்ததில் அங்கு பணியில் இருந்த மஞ்சள்நீா்காயலைச் சோ்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (24) , தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கா் ஆகிய 5 போ் பலத்த காயமடைந்தனா்.

தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களில், ஹரிஹரன் உயிரிழந்தாா்.

இதனிடையே, தொ்மல் நகா் மற்றும் தனியாா் தீயணைப்பு துறையினா் வந்து தீயை அணைத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், நகர துணைக் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்பிரமணிய பால்சந்த்ரா ஆகியோா் ஆலையில் தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். வருவாய்த் துறை அதிகாரிகளும் அங்கு விசாரித்தனா்.

இந்நிலையில், உயிரிழந்த ஹரிஹரனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், தொழிற்சாலை, மருத்துவமனை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்துக்கு காரணம் மின் கசிவா அல்லது அமோனியா கசிவா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT