முகப்பு
தமிழ்நாடு

மின்கட்டணம் செலுத்த 6 மாவட்டங்களுக்கு அவகாசம்

விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சோ்ந்த மின் நுகா்வோா் மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த டிச.10 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 டிசம்பர், 2024 at 10:37 PM
பகிர்:

சென்னை: விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சோ்ந்த மின் நுகா்வோா் மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த டிச.10 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகா்வோருக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10 வரை ஏற்கெனவே கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களை சோ்ந்த மின் நுகா்வோா், தங்களின் மின் கட்டணத்தை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகளை கருத்தில் கொண்டு, அபராதத் தொகை இல்லாமல் மின்கட்டணத்தை செலுத்த டிச.10 வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் செந்தில்பாலாஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.