கோப்புப்படம் 
தமிழ்நாடு

விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து!! உதவி எண்கள்!

விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலம் நீரில் மூழ்கியதால் ரயில் சேவையில் பாதிப்பு...

DIN

சென்னையில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததை அடுத்து, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.

இதனால், விக்ரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பாலம் எண் 452ல் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை நோக்கி வந்த பல்லவன், வைகை விரைவு ரயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்றிரவு புறப்பட்ட ரயில்கள் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வழியாக எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று காலை தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை வந்தே பாரத், வைகை, பல்லவன், சோழன் ஆகிய விரைவு ரயில்கள் இரு வழித்தடத்திலும் இன்றூ ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் ரயில், குருவாயூர் விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி செல்லக்கூடிய ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ரயில்கள் மட்டும் மாற்று வழித்தடத்திலும், சில ரயில்கள் சென்னை - விழுப்புரம் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்

தெற்கு ரயில்வே தரப்பில் பயணிகளுக்கு உதவுவதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - 044 25354140

சென்னை எழும்பூர் - 9003161811

தாம்பரம் - 8610459668

செங்கல்பட்டு - 9345962113

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT