அமைச்சர் சிவசங்கர் 
தமிழ்நாடு

விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து சிறப்புப் பேருந்துகள்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்களுக்கு மாற்றாக பேருந்துகள்

DIN

தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களில் பயணித்த பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் ரயில்வே நிலைய சந்திப்பில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ஆற்றில் வெள்ளத்தின் வேகம் குறைந்திருக்கும் நிலையில், ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்படும் நிலையில், பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளில் சேதம் ஏற்பட்டது.

இதனால் இன்று அதிகாலை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால், ரயிலில் இருந்த பயணிகள், அதிலிருந்து இறங்கி பேருந்து நிலையம் நோக்கிச் சென்றதால் பேருந்து நிலையத்திலும் ஏராளமான கூட்டம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரயில் பாதை சரி செய்யப்பட்டு ஒவ்வொரு ரயிலாக புறப்படத் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஃபெங்சால் புயல் காரணமாக பெய்த கனமழையால் விழுப்புரம்-சென்னை இடையில் ரயில் பாதையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை புறப்பட்ட ரயில்கள் விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் ரயில்வே நிலைய சந்திப்பில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் ரயில்வே நிலைய சந்திப்பில் நேரடியாகச் சென்று சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு ஆய்வும் மேற்கொண்டார்.

இதற்கிடையே நெல்லை மற்றும் அனந்தபுரி ரயில்கள் புறப்படும் என்றும், விழுப்புரத்தில் இருந்து சென்னை இடையே உள்ள ரயில் பாதை சரி செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ரயிலாக சென்னை நோக்கி புறப்படத் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT