முகப்பு
தமிழ்நாடு

புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர்!

ஃபென்ஜால் புயல் பாதிப்புகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த மோடி..

Updated On : 3 டிசம்பர் 2024, 10:49 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை கேட்டறிந்தார்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது.இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளை திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்பு நிவாரணம் நிதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

Advertisement

Advertisement

அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவில் ஃபென்ஜால் புயல் சூரையாடியுள்ளது. 65 லட்சம் குடும்பங்கள் மற்றும் 1.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 2,475 கோடி தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பிரதமருடன் பேசியது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:

“மத்திய குழுவை உடனடியாக அனுப்ப பிரதமர் மோடியிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளேன். பேரிடர் பாதிப்பை மாநில அரசு திறம்பட எதிர்கொண்டு வருவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் கூறினேன். மத்தியக் குழுவை உடனடியாக அனுப்ப பிரதமர் மோடியிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளேன்.

தமிழ்நாட்டின் கோரிக்கையை பிரதமர் மோடி பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உறுதிபட நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments